Press "Enter" to skip to content

சீன அதிபர் சொன்னது போல நடந்தது.. ஒரே நாளில் 25 பேர் பலி.. 5300 பேருக்கு பாதிப்பு.. வேகமெடுத்த கொரோனா

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நேற்று ஒரே நாளில் சீனாவில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு தற்போது 131 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும். அங்கு இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

imageபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்

என்ன சொன்னார்

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துவிட்டார். இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது.இதற்கு மருந்து கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. இதன் வேகமாக நாங்கள் நினைத்தை விட அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தாக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

மரணம்

இந்த நிலையில் சீன அதிபர் சொன்னது போலவே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 131 பேர் பலியாகி இருக்கிறார்கள். நேற்று மட்டும் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளது. இதில் 8 பேர் குழந்தைகள். 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் திடீர் என்று வேகம் எடுத்துள்ளது. இதை யாரை நினைத்து கூட பார்க்கவில்லை.

எவ்வளவு பாதிப்பு

அதேபோல் மொத்தமாக நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் திடீர் என்று அதிகரித்துள்ளது. சீனா முழுக்க நேற்று முதல்நாள் வரை மொத்தம் 2300 பேருக்குத்தான் நோய் தாக்கியது. தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் மளமளவென்று உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் புதிதாக 3000 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 5300 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை

சீனாவில் இந்த நோய் தாக்குதலுக்காக புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி மாலை இது திறக்கப்பட உள்ளது. இங்கு 1000 பேர் சிகிச்சை பெற முடியும். ஆனால், தற்போது இந்த மருத்துவமனையிலும் கூட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5300 ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »