Press "Enter" to skip to content

எங்களை களங்கப்படுத்துறாரு… அவரை தண்டிக்கணும்… மு.க. ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிச்சாமி அவதூறு வழக்கு!

தமிழக அரசுக்கு விருது கொடுத்த மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும் திமுக  தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது அறிவித்தது. இந்நிலையில் அண்மையில் திருமண விழாவில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் வழக்கம்போல தமிழக அரசை விமர்சனம் செய்தார். அப்போது, ‘தமிழக அரசுக்கு சிறந்த நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும்’ என்று ஆக்ரோஷமாகத் தாக்கி பேசினார்.

 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும். அவரை தண்டிக்க வேண்டும் என்று கோரியும் வழக்குத் தொடர்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன் 2 மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »