Press "Enter" to skip to content

சீனாவில் ஒரே இரவில் 30 பேர் பலி.. கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30% உயர்வு

பெய்ஜிங்: சீனாவின் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாள் இரவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 102 ஆக இறந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய் நிலவரப்படி 132 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புதன்கிழமையான இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 132 பேர் இறந்து போனதாக சீனாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

imageபொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா?

65 சதவீதம்

கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை செவ்வாய்கிமையுடன் ஒப்பிடும் போது ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது செவ்வாய்கிழமையுடன் ஒப்பிடும் போது புதன்கிழமை காலைக்குள் 1500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையுடன் ஒப்பிடும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 65 சதவீதம் அதிகம் ஆகும்.

திறமையாக செய்கிறோம்

சீன அதிகாரிகள் கொரோனா வைரஸை தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் தங்கள் சக்திக்கு உட்பட்டு செய்து வருவதாக கூறினார்கள். வுஹானின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மா குய்கியாங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது சோதனை நடவடிக்கைகளால் குறைந்துள்ளது.

வைரஸ் பாதிப்பு

ஜனவரி 14 க்கு முன்னர், வுஹானில் கொரோனா வைரஸிற்கான அனைத்து சோதனைகளும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் செய்யப்பட்டது, இது ஒரு “மிக நீண்ட செயல்முறை”. வுஹானில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்த, (நாங்கள்) அவரது மாதிரியை தேசிய சுகாதார மையத்துக்கு (பெய்ஜிங்குக்கு அனுப்ப வேண்டும்,. அந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, ஜனவரி 16 முதல் சீன மத்திய அரசு ஹூபே மாகாண நோய் தடுப்பு மையத்தில் சோதனைகளை நடத்த அனுமதித்தது.

ஹுபே மாகாணம்

“எனவே எங்கள் மாதிரிகள் இனி பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட வேண்டிய அவசியமில்லை, மேலும் ஹூபே மாகாண சி.டி.சி.யியே சோதிக்கப்படலாம், சுமார் 300 பேரின் மாதிரிகளை (ஒரு நாளைக்கு) சோதிக்கும் திறன் கொண்டது” என்று அவர் கூறினார். சீனாவில் வுஹான் நகர் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கண்ட நகரமாகும். இங்கிருந்து தான் வைரஸ் பரவ தொடங்கியது.‘

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »