Press "Enter" to skip to content

அர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட குணால்.. விமானத்தில் பகீர்.. கடைசியில் இப்படி ஆகிட்டே

மும்பை: இந்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்டண்ட் அப் காமெடியன் குணால் கம்ராவை ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட மூன்று விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணிக்க தடை விதித்துள்ளது.

இந்தியில் மிகவும் பிரபலமான செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி. ரிபப்ளிக் சேனலில் பணியாற்றும் இவர், பல்வேறு முறை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். எப்போதும் பேசிக்கொண்டும், குரல் உயர்த்திக் கொண்டும் இவர் விவாதம் செய்வது நாடு முழுக்க வைரலாவது வழக்கம்.

இவர் மீது நிறைய விமர்சனங்களும் வைக்கப்பட்டது வழக்கம். பொய்யான புகார்களை பரப்புகிறார், செய்திகளை தருகிறார் என்றும் நிறைய விமர்சனங்கள் உள்ளது. அதேபோல் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்களை சரியாக பேச அனுமதிப்பது இல்லை என்றும் புகார்கள் உள்ளது.

imageரஜினி இரட்டை வேடம் போடுகிறார்… இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் விளாசல்

பேசிக்கொண்டே இருக்கிறார்

முக்கியமாக இவர் விவாதத்தின் போது மோசமாக பேசுகிறார். விவாதத்தில் கலந்து கொள்ளும் நபர்களை ஒரு வார்த்தை கூட பேச அனுமதிப்பது இல்லை. மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார் என்று புகார் உள்ளது. பலரும் இணையத்தில் இது தொடர்பாக அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்தவரும், பிரபல ஸ்டண்ட் அப் காமெடியனுமான குணால் கம்ரா அர்னாப் கோஸ்வாமியை சீண்டி உள்ளார்.

என்ன செய்தார்

அர்னாப் கோஸ்வாமி இண்டிகோ விமானத்தில் சென்ற போது அவருடன் அதே விமானத்தில் குணால் கம்ரா பயணித்துள்ளார். அப்போது அர்னாப்பிடம் சென்ற குணால் கம்ரா அவரிடம் நிறைய கேள்விகளை அடுக்கி உள்ளார். சிஏஏ போராட்டம் தொடங்கி, நீங்கள் காசு வாங்கிக் கொண்டு செய்தியை வெளியிடுகிறீர்களா என்றும் கேள்வி கேட்டுள்ளார். இதனால் குணால் கம்ரா இணையம் முழுக்க இதனால் வைரலாகி பெரிய அளவில் டிரெண்ட் ஆனார்.

வைரல்

அர்னாப் அமைதியாக இருந்தே 1.30 நிமிடம் இது மட்டும்தான் என்று பலரும் டிவிட் செய்து வந்தனர். அந்த வீடியோவும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அர்னாப் மீது கோபமாக இருந்த பலர் இதை ஷேர் செய்தனர். அதே சமயம் பாஜகவினர் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குணால் கம்ரா செய்தது தவறு. அர்னாப்பிடம் அவர் இப்படி நடந்திருக்க கூடாது. இதை ஏற்க முடியாது என்று சிலர் கமெண்ட் செய்து வந்தனர்.

தடை செய்தனர்

இந்த நிலையில் குணால் கம்ரா தங்கள் விமானத்தில் பயணிப்பதற்கு மூன்று விமான நிறுவனங்கள் தடை செய்துள்ளது. அதன்படி முதலில் இண்டிகோ விமான நிறுவனம் குணால் கம்ராவை கண்டித்தது. அதோடு தங்கள் விமானத்தில் பறக்க 6 மாதம் தடை விதித்தது. அதன்பின் ஏர்லைன்ஸ் விமானம் குணால் கம்ராவிற்கு மறுதேதி அறிவிக்கும் வரை தடை விதித்தது. தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் உங்கள் செயல் தவறானது என்று கூறி அவருக்கு தடை விதித்துள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »