Press "Enter" to skip to content

மிரட்டல் கொரானா இந்தியாவுக்கு பரவ வாய்ப்பா? வெளியானது ஆபத்தான 30 நாடுகள் லிஸ்ட்

டெல்லி: கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவுவதால் உலகம் முழுக்க பீதி நிலவுகிறது. சீனாவின் இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 132 பேர் இறந்துள்ளனர். சீனாவைத் தவிர, உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த கொடிய வைரஸின் அதிக ஆபத்து உள்ள 30 நாடுகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

imageகொரோனா வைரஸ்.. புதுவை திரும்பிய மருத்துவ மாணவர்கள்.. 28 நாட்கள் கண்காணிப்பில்!

தாய்லாந்து, ஜப்பான்

தாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவை வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அல்லது நகரங்களில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆய்வு அமெரிக்காவுக்கு ஆறாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவுக்கு 10 வது இடத்தையும், இங்கிலாந்துக்கு 17 வது இடத்தையும் கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 23 வது இடத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், ஆய்வாளர்கள் இவ்வாறு கணித்துள்ளனர். தாய்லாந்து தலைநகர், பாங்காக் மிகவும் அச்சுறுத்தலான நகரங்களில் ஒன்றாகும்.

பயணிகள்

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வேர்ல்டாப் குழுவின் அறிக்கையில், பாங்காக் தற்போது வைரஸ் அதிக ஆபத்துள்ள நகரங்களில் ஒன்றாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவால் உள்ள, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் இருந்து பாங்காக்கிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இந்த அறிக்கை.

30 முக்கிய நகரங்கள்

மற்ற 30 முக்கிய சர்வதேச நகரங்களில் ஹாங்காங் இரண்டாவது இடத்தில் உள்ளது, தைப்பே (தைவான்), சிட்னி 12, நியூயார்க் 16, லண்டன் 19 வது இடங்களைப் பிடித்துள்ளது. கொரோனா வைரஸின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், தொற்றுநோயைப் பற்றிய கணம்-கணம் பகுப்பாய்வை வழங்க நாங்கள் அதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஷெங்ஜி லாய் தெரிவித்தார்.

எண்ணிக்கை

கொடிய கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொரோனோ வைரஸ் காரணமாக 5,974 நிமோனியா நோயாளிகள் 31 மாகாண அளவிலான பகுதிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். செய்தி நிறுவனமான சின்ஹுவா படி, மொத்தம் 132 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »