Press "Enter" to skip to content

கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்

1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கப்பட்டது.

புதுடெல்லி:

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை திருத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கருக் கலைப்பு செய்வதற்கான கர்ப்ப கால வரம்பை சில குறிப்பிட்ட பிரிவினருக்கு 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவதற்கு இந்த திருத்தம் அனுமதி வழங்குகிறது.

பாலியல் பலாத்கார சம்பவங்களில் உயிர் தப்பியவர்கள், பிற பாதிப்புக்கு ஆளான பெண்கள் இவர்களில் அடங்குவர்.

இந்த மசோதா வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மந்திரி பிரகா‌‌ஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »