Press "Enter" to skip to content

ஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அங்கு இதுவரை 171 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 5800 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

image3 நாட்கள்.. வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை சாப்பிடுங்கள்.. கொரோனா வராது! அரசு தகவல்

சீனா நிலை

இந்த நிலையில் சீனாவில் தற்போது இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் எல்லோரும் முகத்தில் முகமூடி அணிந்து சுற்றி வருகிறார்கள். வைரஸ் பரவாமல் இருப்பதற்காக இவர்கள் எல்லோரும் முகமூடி அணிந்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொடுதல் மூலம் மட்டுமே பரவும். ஆனாலும் மக்கள் பாதுகாப்பு கருதி இந்த மாஸ்கை அணிந்து இருக்கிறார்கள். இதனால் அங்கு மாஸ்க் அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது.

மாஸ்க் எப்படி

இதனால் அங்கு மாஸ்க் விலை மொத்தமாக அதிகரித்துள்ளது. இதில் நிறைய முறைகேடுகளும் நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் மாஸ்க் விலையை அதிக அளவில் உயர்த்தி உள்ளது. மாஸ்க் விலையை ஒரே அடியாக உயர்த்திய நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காய்ச்சலை தடுக்கும் மருந்துகளும் மொத்தமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் அங்கு சாதாரண நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிர்த்து வருகிறார்கள்.

மதுரை உதவி

இந்த நிலையில்தான் சீனாவிற்கு உதவுவதற்காக மதுரை களமிறங்கி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக மதுரையில் உள்ள எம்எம் மெடிவேர் நிறுவனம் கூடுதல் நேரம் வேலை பார்த்து வருகிறது. சீனாவிற்கு இவர்கள் இங்கிருந்து மாஸ்க் ஏற்றுமதி செய்கிறார்கள். உயர் ரக என்95 மாஸ்க்களை இவர்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

என்ன பேட்டி

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் எம்டி அபிலாஷ் அளித்த பேட்டியில், எங்களுக்கு தினமும் நிறைய ஆர்டர் வருகிறது. சீனாவில் இதற்கான தேவை அதிகரித்துள்ளது. அங்கு மக்கள் இந்த மாஸ்க்களை அதிகம் வாங்கி வருகிறார்கள். அதனால் எங்களிடம் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் நிறைய மாஸ்க்களை கேட்கிறது. இதனால் நாங்கள் எங்கள் பணியை இரட்டிப்பாக்கி, உற்பத்தியையும் இரட்டிப்பாக்கி உள்ளோம். எங்கள் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் இதற்காக பணியாற்றி வருகிறார்கள், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »