Press "Enter" to skip to content

இந்தியாவில் முதல் நபர்.. கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உறுதி செய்யப்பட்டது.. பரபரப்பு!

சென்னை: சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் எல்லோரும் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. சீனா மொத்தமாக கொரோனா வைரஸால் நடுங்கிப் போய் உள்ளது.

இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 171பேர் பலியாகி உள்ளனர். 5900 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

imageஇந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்.. கொரோனா வைரஸிலிருந்து தப்பலாம்.. டிக்டாக்கில் மருத்துவர் அஸ்வின் விஜய்

எப்படி பரவும்

சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது பெங்களூர், கேரளா வரை வந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. கேரளாவில் 7 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 7 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

வேறு எங்கு

அதேபோல் பெங்களூர், ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனியாக வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர்களுக்கு நோய் தாக்கியது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம் இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தாக்குதல் உறுதி செய்யப்படவில்லை. இவர்கள் எல்லாம் சில நாட்களுக்கு முன் சீனாவிற்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்துவிட்டது

சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் பலருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்பட்டது. ஆனால் சோதனையில் யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் முதல்முறையாக இந்தியாவில் ஒருவருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி வந்தது

வைரஸ் தாக்கப்பட்ட நபரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த வாரம் கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் விமான நிலையங்களில் தீவிரமாக மருத்துவ சோதனைகள் நடந்து வருகிறது.இதுவரை சென்னையில் இந்த நோய் அறிகுறியோடு யாரும் வரவில்லை.அதேபோல் சென்னையில் நேரடியாகவும் இந்த நோய் அறிகுறியோடு யாரும் அனுமதியாகவில்லை.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »