Press "Enter" to skip to content

கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு 69 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு 69 லட்சத்து 47 ஆயிரத்து 393 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

கன்னியாகுமரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், முக்கடல் சங்கமம், சன்செட் பாயின்ட், பகவதி அம்மன் கோயில், திருப்பதி கோயில்,புனித அலங்கார உபகாரமாதா திருத்தலம், வட்டக்கோட்டை, சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.

கன்னியாகுமரிக்கு கடந்த ஆண்டு (2019) வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை:

*ஜனவரி மாதம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 671.

*பிப்ரவரி-  5 லட்சத்து 62 ஆயிரத்து 344.

*மார்ச்-5 லட்சத்து 67 ஆயிரத்து  967.

*ஏப்ரல்-5 லட்சத்து 96 ஆயிரத்து 365.

*மே-6 லட்சத்து 11  ஆயிரத்து 273.

*ஜூன்-5 லட்சத்து 68 ஆயிரத்து 484.

*ஜூலை-5 லட்சத்து  4 ஆயிரத்து 60.

*ஆகஸ்ட்-5 லட்சத்து 50 ஆயிரத்து 906.

*செப்டம்பர்- 5 லட்சத்து 61 ஆயிரத்து 925.

*அக்டோபர்-5 லட்சத்து 73 ஆயிரத்து  163.

*நவம்பர்-5 லட்சத்து 90 ஆயிரத்து 358.

*டிசம்பர்-6 லட்சத்து 19  ஆயிரத்து 876.

மொத்தம்- 69 லட்சத்து 47 ஆயிரத்து 393 சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 1 லட்சத்து 24  ஆயிரத்து 311 பேர் வந்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »