Press "Enter" to skip to content

மருத்துவக் கழிவுகளுடன் சென்னை வந்த சீனக் கப்பலை அனுமதிக்கக் கூடாது.. ராமதாஸ் ட்வீட்

சென்னை: மருத்துவக் கழிவுகளுடன் சென்னை வந்த சீனக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த டிசம்பர் மாதம் முதல் பாடாய்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு 170 பேர் பலியாகிவிட்டனர். தற்போது சுமார் 17 நாடுகளில் பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவிலும் பரவியது.

வுகான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளா இளைஞர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று சென்னை வந்ததாக செய்திகள் வெளியாகின. இதில் கொரோனா வைரஸ் கழிவுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கே சில நாடுகள் விசா அனுமதி அளிக்காத நிலையில் இது போன்ற அபாயகரமான கழிவுகளை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஒரு வேளை இவை கடலில் கொட்டப்பட்டால் கடல் வாழ் உயிரினங்கள் மூலம் சென்னைக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்!

— Dr S RAMADOSS (@drramadoss)

January 30, 2020

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் மருத்துவக் கழிவுகளுடன் சென்னை கடலுக்கு வந்துள்ள சீனக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.

மருத்துவக் கழிவுகளை இறக்க அனுமதிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடனடியாக சீன மருத்துவக் கழிவு கப்பலை சென்னை கடல் பகுதியில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு ஆணையிட வேண்டும்! என தெரிவித்துள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »