Press "Enter" to skip to content

ஜாமியாவில் சுட்டது ராம் பகத்.. அவரது உடையை வைத்து கண்டுபிடிங்க.. மோடி மீது ஓவைஸி தாக்கு!

டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரை உடையை வைத்து அடையலாம் காணும்படி மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தற்போது காட்டு தீ போல போராட்டம் பரவி வருகிறது. இந்த சட்டம் செயல்பட தொடங்கினால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம். தற்போது டெல்லி முதல் சென்னை வரை இந்தியா முழுக்க இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சட்டத்திற்கு எதிராக நேற்று டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் அமைதியாக இன்று போராட்டம் நடந்தது. அவர்கள் சார்பாக இன்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இப்படி அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். கருப்பு நிற உடை அணிந்து இருந்த அந்த இளைஞரின் பெயர் ராம் பகத் கோபால் என்று தெரிய வந்துள்ளது.

இவர் தீவிரமான வலதுசாரி கொள்கை கொண்டவர். ஜாமியா மிலியாவில் மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்துவது பிடிக்காமல், அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.

imageஓரங்கட்டப்படும் ஜக்கையன் எம்.எல்.ஏ… கோஷ்டிபூசலில் சிக்கித்தவிக்கும் தேனி அதிமுக

இந்த மாணவர், காஷ்மீரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு காரணமாக மத்திய பாஜக அரசு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி இது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில், இந்த தாக்குதலுக்கு மத்திய பாஜக அரசும் அவர்களின் கொலைகார கொள்கைகளும்தான் காரணம். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நேற்று பேசியதை தொடர்ந்துதான் இன்று இப்படி ஒரு மோசமான தாக்குதல் நடந்துள்ளது. அவர்தான் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் (goli maaro saalon ko) இந்தியாவின் துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று குறிப்பிட்டார்.

அதை இப்போது கோபால் என்ற இந்து இளைஞர் செய்துள்ளார். டெல்லி தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. டெல்லி போலீசுக்கு என்ன ஆனது. இப்போது மட்டும் அவர்களின் வீரம் எங்கே போனது.

போன மாதம் அவர்கள்தான் ஜாமியா பல்கலைக்கு உள்ளே சென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இப்போது அவர்கள் வேடிக்கை பார்ப்பது ஏன்? மக்களுக்கு உதவாமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் டெல்லி போலீசுக்கு கொடுக்கலாம். அதெல்லாம் விட துப்பாக்கியால் குண்டு அடி பட்டவரை கூட மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

அவரை கூட, அங்கே இருந்த தடுப்பு வேலிகளை தாண்டி போக மட்டுமே போலீஸ் அனுமதித்தது. மாறாக அந்த வேலிகளை அங்கிருந்த அகற்ற எடுக்க போலீஸ் அனுமதிக்கவில்லை. என்ன கொடூரம் இது. கலவரம் செய்யும் மக்களை உடையை வைத்து அடையாளம் காணலாம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இப்போது சொல்லுங்கள். ராம் பகத் கோபாலின் உடையை வைத்து சொல்லுங்கள்.. அவர் யார்? என்று ஒவைசி கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »