Press "Enter" to skip to content

15 நாள் தனி அறையில் சோதனை.. கடும் கட்டுப்பாடு.. சீனாவின் வுஹனிலிருந்து இன்று இந்தியா வரும் 400 பேர்

பெய்ஜிங்: சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்படும் இந்தியர்கள் 15 நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அங்கு இதுவரை 205 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 7900 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

imageசீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த சாப்ட்வேர் என்ஜீனியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

டெல்லி செல்கிறது

இந்த நிலையில் சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து சீனாவிற்கு ஏர்இந்தியா விமானம் அனுப்பப்பட உள்ளது. இதற்காக மும்பையில் இருந்த போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 400 பேர் வரை பயணிக்கலாம். முக்கியமான நபர்கள் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் இதில் அதிகம் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்து.

சீனா எங்கே

இந்த விமானம் சீனாவில் நோய் பாதிக்கப்பட்டு இருக்கும் வுஹன் நகரத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதில் 15 இந்திய அதிகாரிகள் செல்ல உள்ளனர். பயணிகள் சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வுஹன் நகராட்ச்த்திற்கு உலக நாடுகள் எல்லாம் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியா மட்டும்தான் விமான போக்குவரத்தை இந்த மீட்பு பணிக்காக மேற்கொள்கிறது. இதை மிகவும் முக்கியமான முடிவு என்று கூறுகிறார்கள்.

என்ன செய்வார்கள்

இந்த நிலையில் இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 15 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 15 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வைரஸ் ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை என்பது உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேரளா

ஏற்கனவே சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 4 பேருக்கு இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த 4 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »