Press "Enter" to skip to content

324 பேர்.. சீனாவின் வுஹனில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானம்.. 14 நாட்கள் சோதனை.. தனி அறை!

சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

என்ன எப்படி

இந்த நிலையில் சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். நேற்று இரவு வுஹன் சென்று விமானம் இன்று காலை டெல்லி வந்தது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 15 இந்திய அதிகாரிகள் சென்றனர்.

பயணிகள் யார்

பயணிகள் சோதித்து விமானத்தில் ஏற்றுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லா பயணிகளும் கடும் சோதனைக்கு பின்பே விமானத்தில் ஏற்றப்பட்டனர். நோய் தாக்குதல் இல்லாதவர்கள்தான் முதலில் இந்தியா கொண்டு வரப்பட்டனர். வுஹன் நகராட்ச்த்திற்கு உலக நாடுகள் எல்லாம் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. இந்தியா மட்டும்தான் விமான போக்குவரத்தை இந்த மீட்பு பணிக்காக மேற்கொண்டுள்ளது..

முக்கிய முடிவு

இதை மிகவும் முக்கியமான முடிவு என்று கூறுகிறார்கள். இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 14 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 14 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

யார் எல்லாம்

இவர்களுக்கு வைரஸ் ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு உண்டாகவில்லை என்பது உறுதியான பின்தான் இவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் , தூதரக அதிகாரிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டள்ளது.. ஒரு நோய் தாக்குதல் உள்ளாகி உள்ள வுஹன் நகரத்திற்கு இந்திய விமானம் சென்று வந்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »