Press "Enter" to skip to content

தனியார்மயமாகிறது எல்.ஐ.சி.- பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு- நிர்மலா சீதாராமன்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது – நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகள் பங்குச் சந்தைகள் பட்டியலிடப்படும்.

இதில் மத்திய அரசின் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்பனை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐடிபியில் உள்ள மத்திய அரசின் பங்குகளையும் விற்பனை செய்யப்படும். அரசின் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று ரூ2.1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »