Press "Enter" to skip to content

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் மத்திய அரசைக் கண்டித்து மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: எல்.ஐ.சி. தனியார் மயமாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை எல்.ஐ.சி. ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக எல்.ஐ.சி. நிறுவனத்தினுடைய பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு வெளியானவுடன் அதிருப்தியில் இருந்த எல்.ஐ.சி. ஊழியர்கள், மதுரையில் உள்ள எல்.ஐ.சி தலைமை நிறுவனத்தின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் எல்.ஐ.சி. ஊழியர்கள் அந்த அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எல்.ஐ.சி. என்பது பொதுமக்களுக்கு வாரி வழங்கக்கூடிய அரசாங்க நலத்திட்டங்களுக்கு வரி வழங்கக்கூடிய நிறுவனமாகும். ரயில்வே திட்டம், அடிப்படை வசதிகளை மேம்ப்படுத்தக்கூடிய திட்டமாக இருந்தாலும் கடந்த ஆண்டில் பல லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி. அரசாங்க திட்டடங்களுக்கு வழங்கி இருக்கிறது.

இதனையடுத்து இந்த எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்தால் பல அரசாங்க நலத்திட்டங்கள் பாதிக்கப்படும், மேலும் இந்த எல்.ஐ.சி..யை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்ற கோஷத்தை முன்வைத்து தற்போது போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக வருகின்ற பிப்ரவரி. 4-ம் தேதி செவ்வாய் கிழமை பகல் 12 மணியில் இருந்து ஒரு மணி வரை அனைத்து எல்.ஐ.சி. நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்தவோம் என்றும் தங்களுடைய பங்குகளை நிச்சயமாக விற்பனைசெய்ய விடமாட்டோம் என்றும் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »