Press "Enter" to skip to content

2வது விமானத்தை அனுப்பிய மத்திய அரசு.. சீனாவிலிருந்து இந்தியா வந்த 323 பேர்.. முகாமில் தங்கவைப்பு!

பெய்ஜிங்: சீனாவில் இருந்து இன்று ஏர்இந்தியா சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 304 ஆகியுள்ளது. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. இதன் வேகம் இப்போது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

imageகொரோனா வைரஸால் சீனாவுக்கு வெளியே முதல் பலி.. பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு

சீனா

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக 323 இந்தியர்கள் சீனாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹன் நகரத்திற்கு இதனால் ஏர்இந்தியா விமானம் நேற்று இரவு அனுப்பப்பட்டது. இந்தியாவின் விமானத்திற்காக அங்கு மக்கள் காத்திருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் அங்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது. அங்கு சோதனைக்கு பின், இந்தியர்கள் எல்லோரும் விமானத்தில் ஏற்றப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டனர்.

இன்று காலை

இன்று காலை அந்த போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் இந்தியா வந்தது. இதில் இருந்த 324 பேரும் மீண்டும் சோதனை.செய்யப்பட்டனர். இவர்கள் டெம்பரேச்சர் டெஸ்ட் (temperature test) எனப்படும் தெர்மல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுடன் மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் அழைத்து வரப்பட்டனர். அந்நாட்டு அரசின் கோரிக்கையின் அடிப்படையில் இவர்கள் 7 பேரும் அவசரமாக மீட்கப்பட்டார். அந்நாட்டு அரசு இதற்கு நன்றி தெரிவித்துள்ளது.

யார் எல்லாம்

ஆனால் நோய் தாக்குதல் இல்லாத நபர்கள் மட்டுமே இப்படி கொண்டு வரப்படுகிறார்கள். ஏற்கனவே கொண்டு வரப்பட்டவர்களிலும் யாருக்கும் நோய் தாக்குதல் இல்லை. முக்கியமாக மாணவர்கள் அதிக அளவில் கொண்டு வரப்படுகிறார்கள். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். சீனாவில் வேலை பார்க்கும் இந்திய அரசு அதிகாரிகள் சிலரும் இப்படி இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செய்வார்கள்

இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 14 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 14 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும். இந்த நிலையில் இந்த 324 பேரையும் இந்தியா – திபெத் எல்லைக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். இந்தியா திபெத் எல்லையில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »