Press "Enter" to skip to content

10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ

பெய்ஜிங்: சீனாவில் சிக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க தங்கள் நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை எண்ணி வீடியோவில் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால் மக்கள் வீட்டை வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உணவு வாங்குவதற்கும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும் முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த உயிர் கொல்லி தாக்குதலால் அந்நாட்டில் 304 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

imageபயோ ஆயுதமாக மாற்றப்படுகிறதா கொரோனா வைரஸ்.. ஆய்வு கட்டுரையால் பெரும் சர்ச்சை

ஏர் இந்தியா

இந்த நிலையில் சீனாவில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களை அந்தந்த நாட்டினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில் சனிக்கிழமை இந்தியாவிலிருந்து புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம், வுகான் நகரத்தில் தவித்து வந்த 324 மாணவர்களை பத்திரமாக மீட்டனர். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை சீனாவில் செய்யப்பட்டு பின்னர் அவர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டனர்.

பீதி

அந்த விமானம் இன்று காலை இந்தியா வந்த நிலையில் அங்கு வைத்தும் அவர்கள் சோதனை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மற்றவர்களை மீட்க மீண்டும் ஒரு விமானத்தை மத்திய அரசு அனுப்பியது. இன்றைய தினம் மேலும் உள்ளவர்கள் மீட்கப்படுவர். இந்த நிலையில் சீனாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

வேதனை

உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருவதை அடுத்து அங்கு சிக்கி தவித்து வரும் அவரவர் நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசாங்கம் காப்பாற்றி வருகிறது. ஆனால் சீனாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் மாணவர்களுக்கு உதவி செய்ய அந்நாட்டு அரசு முன்வரவில்லை என்பதை நினைத்து அவர்கள் வேதனையில் உள்ளனர்.

உணவு

இதுகுறித்து அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் முகமூடி அணிந்த 3 பாகிஸ்தான் பெண்கள் தங்களை காக்க வருமாறு பாகிஸ்தான் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நெருக்கடியான நிலையால் பாகிஸ்தானில் உள்ள அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வுகான் நகரமே முடங்கியுள்ளதால் உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

உணவில்லாமல் தவிப்பு

மேலும் தங்களை போல் பாகிஸ்தானை சேர்ந்த 40 பேர் இங்கு சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எத்தனை நாட்களுக்கு அடைந்து கிடப்பது, நாங்கள் என்ன செய்வது, 10 நாட்களாகியும் எங்களை மீட்க பாகிஸ்தான் அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »