Press "Enter" to skip to content

தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் தேவாலய நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 20 பேர் பலி

மோஷி: தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கடும் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் ஒன்றின் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நோய்களை குணமாக்கும் புனித எண்ணெய் வழங்கப்படுவதாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

இந்த புனித எண்ணெய்யை பெறுவதற்கு மைதானத்தில் திரண்டிருந்தோர் வரிசைகளை மீறி முன்னேறினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இந்நெரிசலில் ஏராளமானோர் சிக்கி படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றிருக்கிறது. இரவில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »