Press "Enter" to skip to content

குடிக்க நீர் இல்லை.. ஷாகீன் பாக் “தீவிரவாதிகளுக்கு” பிரியாணி விநியோகம் செய்யும் கெஜரிவால்- யோகி அட்டாக்

டெல்லி: டெல்லியில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் ஷாகீன் பாகில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அரவிந்த் கெஜரிவால் அரசு பிரியாணி வாங்கி கொடுக்கிறது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் ஷாகீன் பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுமார் 40 நாட்களுக்கும் மேலாக இங்கு நடந்து வரும் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் டெல்லி அரசு தவித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆம் ஆத்மி

இதில் கடந்த முறை ஆம் ஆத்மியிடம் விட்டதை பிடிக்க பாஜகவும் காங்கிரஸும் கடுமையாக முயற்சித்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை டெல்லி முதல்வர் கெஜரிவாலும் எதிர்த்துள்ளார். எனவே அமைதியான முறையில் நடத்தப்படும் ஷாகீன் பாக் போராட்டத்திற்கு டெல்லி அரசு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

வாக்கு சேகரிப்பு

இந்த நிலையில் அரவிந்த் கெஜரிவாலுக்கு எதிராக பாஜகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் கிழக்கு டெல்லியில் கராவல் சவுக் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஷாகீன் பாக்

அவர் பேசுகையில் கெஜரிவாலுக்கு டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர எண்ணமே இல்லை. அது போல் டெல்லி மக்களுக்கு சுத்தமான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. அவருக்கு ஷாகீன் பாக் ஒன்றே போதுமானது. மெட்ரோ, சாலை வசதிகள் வேண்டுமா, இல்லை ஷாகீன் பாக் வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பிரியாணி

கெஜரிவால் அரசின் நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை. மாறாக ஷாகீன் பாக் பகுதியில் போராடுவோருக்கு பிரியாணி வாங்கித் தருகிறார்கள். சுருக்கமாக சொல்ல போனால் அங்கு போராடுபவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் மீது நமது முப்படைகளின் மூலம் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்று வருகிறோம். ஆனால் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பிரியாணி வாங்கித் தருகிறார்கள் என யோகி தெரிவித்தார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »