Press "Enter" to skip to content

இது சூசைட் மிஷன்.. விருப்பம் உள்ளவங்க வாங்க.. சீனாவில் மருத்துவர்களை அழைத்த அரசு.. நடந்த அதிசயம்!

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. இதை அந்நாட்டு அரசு சூசைட் மிஷன் என்று அழைக்கிறது.

யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 314 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 14500 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

imageபயோ ஆயுதமாக மாற்றப்படுகிறதா கொரோனா வைரஸ்.. ஆய்வு கட்டுரையால் பெரும் சர்ச்சை

எப்படி வைரஸ்

இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து சோதனை செய்து வருகிறார்கள். வுஹன் நகரத்தில் இதற்காக 6 நாட்களில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்

ஆனால் அங்கு நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14500 ஐ தாண்டி உள்ளது. இதனால் அங்கு மருத்துவர்களுக்கு அதிக அளவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு அங்கு மருத்துவர்கள் இல்லை. இதனால் சீனாவின் பல பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் வுஹன் நோக்கி அழைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளும் தேர்வு செய்யயப்பட்டுள்ளனர்.

இவர்கள் யார்

ஆனால் இவர்கள் யாரையும் அன்நாட்டு அரசு வற்புறுத்தவில்லை. மாறாக, வர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தாங்களாக முன் வந்து வுஹன் செல்லலாம். இந்த அறிவிப்பை வெளியிடும் போதே சீன அரசு அந்நாட்டு மருத்துவர்களிடமும், இது ஒரு தற்கொலை மிஷன். வுஹன் செல்வதில் நிறைய ஆபத்து இருக்கிறது. அதையும் மீறி செல்ல விருப்பம் உள்ளவர்கள், சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ளவர்கள், வரலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சீனா பெய்ஜிங்

இதற்காக சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து நேற்று முதல் நாள் வுஹன் நகரத்திற்கு ரயில் ஒன்று சென்றுள்ளது. இதில் மருத்துவர்களை மட்டும் அழைத்து சென்றுள்ளனர். இதில் அதிசயமாக 300க்கும் அதிகமான மருத்துவர்கள் முதற்கட்டமாக அழைத்து சென்றுள்ளனர். அதிக அளவில் பெண் மருத்துவர்கள் இதற்காக முன் வந்து களமிறங்கி உள்ளனர். இந்த சூசைட் மிஷனில் செல்லும் மக்களை அந்நாட்டு அரசு பாராட்டி உள்ளது. மக்களும் அவர்களை புகழ்ந்து வருகிறார்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »