Press "Enter" to skip to content

மீட்புக்கு வாய்ப்பு இல்லை.. மருத்துவ வசதியும் இல்லை.. சீனாவிலேயே இருங்கள்.. பாக். தூதர் அதிர்ச்சி

இஸ்லாமாபாத்: சீனாவில் தவித்து வரும் மாணவர்களை மீட்க முடியாது. ஏனெனில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ சிகிச்சை இங்கு இல்லை என சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது உலகளவில் 17 நாடுகளில் தொற்றி பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோய்க்கு சீனாவில் 304 பேர் பலியாகிவிட்டனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சீனாவுக்கு மற்ற நாடுகளிலிருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனா

மேலும் அந்தந்த நாட்டினர் சீனாவில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்கள், மக்களை விமானத்தை அனுப்பி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சீனாவில் தங்கியுள்ள மாணவர்களை மீட்க இந்தியாவில் இருந்து சனிக்கிழமை விமானம் அனுப்பப்பட்டது. இதன் மூலம் 324 பேர் மீட்கப்பட்டனர். இரண்டாவது விமானம் இன்று காலை அனுப்பப்பட்டுள்ளது.

உணவு

அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டினரை மீட்டு வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் நாடோ யாரையும் மீட்பதற்கான எந்தவித முயற்சியையும் செய்யவில்லை. இதுகுறித்து சீனாவில் உள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்கவில்லை என கண்ணீர் வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோவில் மாணவர்கள் கூறுகையில் உணவு கிடைக்காமல் ஒரே இடத்தில் அடைந்து கிடக்கிறோம்.

முயற்சி

எங்களை மீட்க பாகிஸ்தான் அரசு முன் வர வேண்டும். எத்தனை நாட்களுக்கு நாங்கள் இங்கேயே இருக்க முடியும்? அந்தந்த நாட்டினரை மீட்டு வரும் நிலையில் 10 நாட்களாகியும் எங்களை மீட்க பாகிஸ்தான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இதை பார்க்கும் பாகிஸ்தான் மக்களே எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பாக் தூதர்

இதுகுறித்து சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் நக்மனா ஹாஸ்மி கூறுகையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நோயாளிகளை காக்க சீனாவில் சிறந்த மருத்துவ வசதி உள்ளது. பாகிஸ்தான் மாணவர்கள் வெளியிட்ட வீடியோவில் உணவில்லாமல் தவித்து வருவதாக கூறியுள்ளனர். எனினும் பாகிஸ்தான் தூதரகம் அவர்களை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்யும்.

பாகிஸ்தானில் கொரோனா

பாகிஸ்தானில் கொரோனா போன்ற புதிய வைரஸ்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகள் ஏதும் இல்லை. எனவே பாகிஸ்தான் மாணவர்கள் வுகான் நகரத்தில் இருப்பதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது. பாகிஸ்தான் மாணவர்களின் பிரச்சினைகளை பாகிஸ்தான் தூதரகமும் சீன அரசும் இணைந்து தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றார் ஹாஸ்மி.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »