Press "Enter" to skip to content

தேசிய அளவில் ‘கிளிமூக்கு, விசிறிவால்’ சேவல் கண்காட்சி 2 சேவல்கள் விலை ரூ.12 லட்சம்: 400க்கும் அதிகமாக திண்டுக்கல்லில் திரண்டன

திண்டுக்கல்: தேசிய அளவிலான கிளிமூக்கு, விசிறிவால் சேவல்கள் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய கிளிமூக்கு, விசிறிவால் சேவல் இனங்களை பாதுகாக்கும் வகையிலும், இதனை வளர்ப்பதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் 6வது ஆண்டாக தேசிய அளவிலான சேவல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கிளிமூக்கு, விசிறிவால் உள்பட பல்வேறு இன சேவல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் 400க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்கு வந்திருந்தன. இந்த சேவல்களுக்கு கம்பு, சோளம், நவதானியம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்றவை உணவாக தரப்படுகின்றன. சாதாரண சேவல்களுக்கும், கிளிமூக்கு, விசிறிவால் சேவல்களுக்கும் வித்தியாசம்  வால் மட்டுமே 2 முதல் மூன்று அடி வரை நீளமாக இருக்கும். இவற்றின் தலையில் கொண்டை போன்ற அமைப்பும், கிளிக்கு உள்ளது போன்ற மூக்கும் காணப்படும்.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சேவல்கள் ரூ.20 ஆயிரம் முதல் சேவலின் எடை உயரம், வாலின் நீளம், மூக்கின் அலகு போன்றவற்றை கொண்டு ரூ.6 லட்சம் வரை விலை போனது. கிளிமூக்கு, விசிறிவால் ரகத்தைச் சேர்ந்த 2 சேவல்கள், தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்துக்கு நேற்று ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியில் சிறந்த சேவல்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »