Press "Enter" to skip to content

“அந்த” காணொளியை பார்ப்பவர்கள் மட்டுமல்ல.. இனி இவர்களும் குற்றவாளிகளே.. ஏடிஜிபி எச்சரிக்கை!

சென்னை: குழந்தைகளின் ஆபாச வீடியோ மட்டுமல்ல.. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடைபெறுவதை பார்த்த பின்பும் அது பற்றி புகார் தெரிவிக்காதவரும் குற்றவாளிக்கு உடந்தையாகவே கருதப்படுவார்கள் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் அதிரடியில் தமிழக போலீசார் இறங்கி உள்ளனர்.. அதனாலேயே இது சம்பந்தமான எச்சரிக்கையை பலமுறை விடுத்து வருகின்றனர்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை பார்க்கக்கூடாது என்று மட்டுமல்ல.. செல்போனிலேயே வைத்திருக்கக்கூடாது என்று கூடுதல் டிஐஜி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் ஆங்காங்கே இன்னமும் இந்த குற்றம் குறையவில்லை. ஆபாச படம் பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட 15 பேரை பிடித்து கைது செய்தும் வருகிறார்கள்.

பயிலரங்கம்

இந்நிலையில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ கடமைகள் குறித்த, சென்னை மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மற்றும் இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் சார்பில் இந்த பயிலரங்கம் நடந்தது. இதில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி ரவி பங்கேற்று பேசினார்.

விழிப்புணர்வு

அப்போது அவர் பேசியதாவது: “இந்த பயிலரங்கில் கற்றுக்கொள்ளும் பாடங்களை வைத்து நல்ல ஒரு விழிப்புணர்வை, குழந்தைகள் மத்தியில், ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டம் என்றால் என்ன என்பது குறித்து எளிமையாக குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். அதாவது, 60 நாட்களுக்குள் போலீஸார் வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வருஷத்துக்குள் கோர்ட்டில் விசாரணையை முடித்து தண்டனையும் கொடுக்க வேண்டும்.. இதுதான் அந்த போக்சா சட்டத்தின் சிறப்பம்சம்.

மரண தண்டனை

இந்த சட்டத்தின்படி, குற்றம் நடைபெறுவதை பார்த்த பின்பு, அதை போலீசாருக்கு தெரிவிக்காவிட்டால் நீங்களும் குற்றவாளிகளுக்கு உடந்தையே. முந்தைய சட்டங்கள் போல் அல்லாமல், போக்சோ சட்டம் நடைமுறை சிக்கல்களை நீக்கி எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை முதல், மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இச்சட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டும்” என்றார்.

ஆபாச படங்கள்

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஏடிஜிபி ரவி சொன்னதாவது: “பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் முகம் தெரியாத நபா்களால்தான் சோஷியலை மீடியா மூலம் நடக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்த மற்றும் அதனை ஷேர் செய்தவர்கள் 630 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்தவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

காவலன் செயலி

இந்த கைது நடவடிக்கையால் இன்டர்நெட்களில் ஆபாச படம் பார்ப்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்வென்றால், யாரெல்லாம் ஆபாச படத்தை டவுன்லோடு செய்தார்களோ, அவர்களே அதை நீக்கியும் உள்ளனர்.. மேலும் காவலன் செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 16 லட்சம் போ் இதுவரை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனா். அதில் 90 சதவீதம் பெண்கள்.. குழந்தைகள் ஆவர்” என்றார் ஏடிஜிபி!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »