Press "Enter" to skip to content

அந்த மருந்தை கொடுத்தோம்.. உடனே உடல் குணமானது.. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதா தாய்லாந்து?

பாங்காக்: கொரோனாவிற்கு தாய்லாந்து மருத்துவமனையில் பயன்டுத்தப்பட்டு வரும் மருந்து ஒன்று சிறப்பாக பலன் அளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளை இந்த ஆராய்ச்சி ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 361 பேர் பலியாகி உள்ளனர்.

17201 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 24 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.

imageகொரோனா அச்சம்.. சீனாவிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர பரிசோதனை.. விழுப்புரத்தில் பரபரப்பு

தாய்லாந்து எப்படி

இந்த நிலையில் தாய்லாந்திலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் மொத்தம் 35 பேர் சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 19 பேருக்கு இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் இதில் மோசமான உடல் நிலையில் இருக்கிறார்கள். 8 பேர் முழுவதுமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.

எங்கே

இந்த நிலையில் பாங்காக்கில் இருக்கும் ராஜவீதி மருத்துவமனையில், இந்த கொரோனாவிற்கு மறுத்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, எச்ஐவி எதிர்ப்பு மருந்து மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை கொரோனா வைரசுக்கு எதிராக பயன்படுத்தி உள்ளனர். லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற கலவையான மருந்தை இதற்கு பயன்படுத்தி உள்ளனர்.

மருந்து இருக்கிறது

இரண்டு மருந்துகளையும் கலந்து, புது மருந்தை உருவாக்கி கொடுத்துள்ளனர். 70 வயது பெண்ணுக்கு இதை அளித்துள்ளனர். அவருக்கு உடனே வைரஸ் குணமாகி உள்ளது. ஆம், 10 நாட்களாக இதனால் அவதிப்பட்டு வந்தவருக்கு, அந்த மருந்தை கொடுத்த மறுநாளே நோய் சரியாகி இருக்கிறது. இவர் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த மருந்தை வேறு யாருக்காவது கொடுக்கலாமா என்று தீவிரமாக ஆலோசனை செய்தும் வருகிறார்கள்.

பெண்கள்

இதே மருந்தை இன்னொரு பெண்ணுக்கும் கொடுத்த்துள்ளனர். ஆனால் கலவையின் அளவில் வித்தியாசம் ஏற்பட்டதால், அந்த பெண்ணுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் உடலும் தேறி வருவதாக மருத்துவர்கல் கூறுகிறார்கள். இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. ஆனால் இதன் மூலம் விரைவில் கொரோனாவிற்கு நிரந்தர மருந்து கண்டுபிடிக்கப்படலாம், என்றும் கூறுகிறார்கள். தற்போது அளித்த மருந்து குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »