Press "Enter" to skip to content

நெருக்கமான படங்கள் லீக் பிரச்சனை.. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீது காதலியின் சகோதரர் வழக்கு

சான்பிரான்சிஸ்கோ: நெருக்கமான படங்களை லீக் செய்துவிட்டதாக குற்றம்சாட்டிய அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மீது அவரது காதலியின் சகோதாரர் மைக்கேல் சான்செஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

உலகின் பெரும் பணக்கார் ஜெஃப் பெசோஸ் தன்னுடைய காதலி லூரன் சான்செஸ்சின் சகோதரர் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னுடைய ரகசிய உறவு மற்றும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய தனிப்பட் மெசேஜ்களை அமெரிக்க செய்தி நிறுவனமான நேஷனல் என்க்யூரி என்ற பத்திரிக்கைக்கு 200000 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்றுவிட்டதாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார்.

அத்துடன் அமெரிக்க செய்தித்தாளான நேஷனல் என்க்யூரி அதன்னை பிளாக் மெயில் செய்து பணம் பறிக்க முயன்றதாக குற்றம்சாட்டினார். இதற்கு காரணமாக மைக்கேல் இருக்கலாம் என்றும் கூறினார்.

அமேசான் நிறுவனர் பெசோஸின் செல்போனை சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் செல்போனை ஹேக் செய்ததாக கார்டியன் தளத்தில் செய்தி வெளியானது. இதை சவுதி அரேபியா மறுத்துவிட்டது. ஒருவேளை ஹேக் சவுதி பெசோஸின் செய்திருந்தால் மைக்கேலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது

imageஒரு இடத்தில் நிற்காமல்.. சிரித்தபடியே.. எகிறி எகிறி குத்தி.. அடடா யாருப்பா அது.. அசத்திய ஜெயக்குமார்

இப்படி பலவாறாக தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் மைக்கேல் சென்சூஸ். அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் ஜெஃப் பெசோஸ்க்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »