Press "Enter" to skip to content

பிரபல நடிகையிடம் 160 தடவை அறை வாங்கிய மிஷ்கின்… எதற்காக தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருத்த “சைக்கோ” படம் தியேட்டர்களில் மரண பீதியில் சீட் நுனியில் உட்கார வைத்தது. 

முன்னணி இயக்குநராக வலம் வரும் மிஷ்கின், சில வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அப்படி மிஷ்கின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, காயத்ரி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் பிரபல விருது விழா ஒன்றில் பங்கேற்று பேசிய மிஷ்கின், சூப்பர் டீலக்ஸ் படத்தில் என்னை நடிகை ரம்யா கிருஷ்ணன் அடிப்பது போல் ஒரு காட்சி வரும், அந்த ஒரு சீனுக்காக மட்டும் 160 ரீ-டேக்குகள் வாங்கி ரம்யா கிருஷ்ணன் தன்னை அடித்ததை நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் தான் இயக்கும் படங்களுக்காக மட்டுமல்ல, நடிக்கும் படங்களுக்காகவும் எதையும் செய்ய துணிபவர் மிஷ்கின் என்பது தெரியவந்துள்ளது. 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »