Press "Enter" to skip to content

கொரோனா பாதித்த பெண்ணுடன் இளைஞர் செய்த காரியம்…!! நடந்த வற்றை நீங்களே பாருங்கள்…!!

கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ள சீனாவைச் சேர்ந்த காதலியை இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கரம்பிடித்து உள்ள சம்பவம் மிகுந்த  பாராட்டை பெற்றுள்ளது.   சீன நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வரக்கூடாது என பல  நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இந்தியர் திருமணம் செய்துள்ளது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த டிசம்பர்  மாதம் சீனாவிட் வுஹனில் கொரோனா  வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .   அந்த வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில்  இதுவரையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 10,000 க்கும்  மேற்பட்டோருக்கு கொரோனா  வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

இந்நிலையில் சர்வதேச நாடுகள் தங்களது விமானநிலையத்தில் சீனர்களை தடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே தங்கள் நாட்டுக்குள் அனுமதித்து வந்தனர் .   ஆனால் தற்போது கொரோனா மிகத் தீவிரமாக பரவிவருவதால்  சீனர்கள் தங்கள் நாட்டிற்குள் வர அந்நாடுகள் ஒட்டுமொத்தமாக தடை விதித்துள்ளன .  சீனர்களை கண்டாலே மக்கள் தெரித்து ஓடும்  நிலை  இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ளது .   இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்ஸரைச் சேர்ந்த  சத்யாமிஸ்ராவும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும்  திருமணம் செய்துள்ளனர் .   இருவரும் கனடாவில் ஒன்றாக படிக்கும்போது காதல் வயப்பட்டு பின்னர் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த  நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் . 

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் , இத் திருமணம் நடைபெற்றுள்ளது .  சீனாவில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி இருந்தாலும் மணப்பெண் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த புதன்கிழமை மாண்ட்ஸர்  வந்து சேர்ந்தனர் ,  அதேநேரத்தில் கொரோனா வைரஸ் உள்ளதா என மணப்பெண்ணின் பெற்றோரையும் உறவினர்களையும் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர் . இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று சத்தியார்த்துக்கும் ஷிகாகோவுக்கும்  திருமணம் சிறப்பாக நடைபெற்றது .  திருமணத்திற்கு சீனாவில் இருந்து அவரது உறவினர்கள் இன்னும் சிலர் வருவதாக இருந்த நிலையில் இ-விசா முறை ரத்து ,  சீன அரசு அனுமதிக்காதது போன்ற காரணங்களால் அவர்களால் வர இயலவில்லை .  ஆனாலும் திட்டமிட்டபடி இத்திருமணம் வெகு விமர்சையாக இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.  

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »