Press "Enter" to skip to content

அஸ்ஸாமில் அதிர்ச்சி… கச்சா எண்ணெய் குழாய் வெடித்து 3 நாட்களாக ஒரு நதியே பற்றி எரிந்த பயங்கரம்!

அஸ்ஸாமில் அதிர்ச்சி… கச்சா எண்ணெய் குழாய் வெடித்து 3 நாட்களாக ஒரு நதியே பற்றி எரிந்த பயங்கரம்! – வீடியோ

குவஹாத்தி: அஸ்ஸாமில் கச்சா எண்ணெய் குழாய் வெடித்து புர்ஹி திஹிங் என்ற நதி 3 நாட்களாக எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது திப்ரூகர் மாவட்டம். இம்மாவட்டத்தின் துலியாஜான் அருகே புர்ஹி திஹிங் என்ற நதி ஓடுகிறது.

இந்நதியின் கரையோரத்தில் கச்சா எண்ணெய் குழாய்களை ஆயில் இந்தியா நிறுவனம் அமைத்திருக்கிறது. இந்த கச்சா எண்ணெய் குழாய்களில் திடீரென கசிவுகள் ஏற்பட்டு தீ பிடித்தது.

இதனால் புர்ஹி திஹிங் நதி தீப்பிடித்து பயங்கர புகையுடன் தீப்பிழம்புகள் பல அடி உயரத்துக்கு அழுந்தன. அப்பகுதி மக்களை இது கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

imageஅமெரிக்கா, சீனாவின் சீக்ரெட் ஆராய்ச்சி.. நாகாலாந்தில் நடத்த ‘வௌவால் வைரஸ்’ சோதனை.. கொரோனா பீதி!

ஆனால் ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகளோ, அப்பகுதி பொதுமக்கள்தான் கச்சா எண்ணெயை திருடுவதற்கு குழாய்களை வெட்டியதாலேயே தீ பிடித்தது என குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 3 நாட்களாக ஒரு நதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அஸ்ஸாமில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

தற்போது தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »