Press "Enter" to skip to content

காஷ்மீரில் இந்திய ராணுவ உலங்கூர்தி விபத்து.. விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் உயிர்தப்பினர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் காஷ்மீர் எல்லையிலும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு காஷ்மீரில் இன்னும் பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. காஷ்மீரின் ரேசி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. ரோந்து பணியை மேற்கொள்ளும் போது இந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்துள்ளது.

imageதர்பார் படம் நஷ்டமா.. ரஜினியை சந்திக்க குவிந்த விநியோகஸ்தர்கள்.. போலீஸ் தடுத்ததால் பரபரப்பு!

இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் விழுந்த நொடியில் விமானிகள் இருவரும் பாராசூட் உதவியுடன் உயிர்தப்பினர். ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும், இந்த ஹெலிகாப்டர் விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »