Press "Enter" to skip to content

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு.. 4 பேருக்கு சாகும் வரை சிறை.. 9 பேருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 குற்றவாளிகளில், ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய நான்கு பேர் சாகும் வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை பல நாட்களாக 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த கொடூரத்திற்கு வித்திட்டவர் லிப்ட் ஆப்ரேட்டர் ரவிக்குமார் (வயது 56) என்பவர் தான்.

இவன் தான் சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது மொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் என மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சீரழித்துள்ளான். தன்னுடைய பேத்தி வயது இருக்குமே என்பதை எண்ணி பார்க்காமல் தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சிறுமியை சீரழித்துள்ளான்.

15 பேர் கொடூர செயல்

அத்துடன் தன்னுடன் பணிபுரியும் மற்றும் தனக்கு தெரிந்தவர்களுக்கு வீடியோவை காண்பித்துள்ளான். அதன் மூலம் பிளம்பர் ராஜா (32), எலக்ட்ரீசியன் உமாபதி (42), வீட்டு வேலைக்காரர் ஜெயராமன் (26), பிளம்பர் சூர்யா ( 23) , ஜெய் கணேஷ்(23), பரமசிவம்(23), சுகுமாறன்(60), முருகேசன்(54) , ராஜசேகர் (48), எரல் பிராஸ் (58) உள்பட 16 பேர் சிறுமியை தொடர்ந்து பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

கொதித்த மக்கள்

மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் இந்த கும்பல் மாற்றுத்திறனாளி சிறுமியிடம் வெறிச்செயலில் ஈடுபட்டது அந்த கும்பல்! கடந்த 2018ம் ஆண்டு தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு நடந்த விவரங்கள் அனைத்தும் வெளியானது தமிழக மக்கள் கொதித்து போனார்கள. இந்து கொடூரர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

தண்டனை அறிவிப்பு

இதற்கிடையே இந்த வழக்கை விரைந்து விசாரித்த சென்னை போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது சென்னை போஸ்கா நீதிமன்றத்தி விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அறிவித்தது. இந்த வழக்கில் தண்டனை விவரத்தை இன்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

4 பேருக்கு தண்டனை

அதன்படி அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 குற்றவாளிகளில், ரவிக்குமார் (56), சுரேஷ் (32), அபிஷேக் (28), பழனி (40) ஆகிய நான்கு பேர் சாகும் வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜசேகர் (48) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எரல் பிராஸ் (58) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் விடுதலை

லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயான் (வயது 50), பிளம்பர் ராஜா (32), எலக்ட்ரீசியன் உமாபதி (42), வீட்டு வேலைக்காரர் ஜெயராமன் (26), பிளம்பர் சூர்யா ( 23) , ஜெய் கணேஷ்(23), பரமசிவம்(23), சுகுமாறன்(60), முருகேசன்(54) ஆகிய 9 பேருக்கு ஐந்து ஆணடுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குணசேகரன் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாபு என்பவர்(36) இறந்தவிட்டதால் அவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மற்றபடி குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் 15 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »