Press "Enter" to skip to content

சி.ஏ.ஏ. போராட்டங்களுக்கு முன் முதல் முறையாக அஸ்ஸாம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி

குவஹாத்தி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிரான போராட்டங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அஸ்ஸாமில் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அஸ்ஸாமில் முதன் முதலாக போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதனால் குவஹாத்தியில் ஜப்பான் பிரதமர் அபேவுடன் பிரதமர் மோடி மேற்கொள்ளவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

பின்னர் கெலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அஸ்ஸாம் செல்வார் என கூறப்பட்டது. ஆனால் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றதால் இப்பயணத்தையும் பிரதமர் மோடி ரத்து செய்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 7-ந் தேதி அஸ்ஸாமின் கோக்ராஜரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இப்பகுதி அண்மையில் மத்திய அரசின் ஒப்பந்தம் மூலம் உருவான போடோ பிராந்திய பகுதிக்குட்பட்டதாகும்.

imageநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்… தமிழக பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லியில் கடந்த வாரம் போடோலாந்து தனி மாநிலம் கோரும் அமைப்பினருடன் மத்திய அரசு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் போடோ பிராந்திய பகுதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அஸ்ஸாம் பயணத்துக்குப் பின்னர் மேற்கு வங்கத்திலும் டெல்லியிலும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »