Press "Enter" to skip to content

கர்நாடக உயர்நீதிநீதி மன்றத்தில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை தீர்ப்பு

கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரும் மனு மீது நாளை (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் அமைந்துள்ளது. அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் பிறகு அவர் வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதையடுத்து லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி நித்யானந்தாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.

இந்த நிலையில் அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், நித்யானந்தாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசு, அவரது தியான பீடத்தில் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு 5-ந் தேதி (அதாவது நாளை) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். நித்யானந்தா தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து அழைத்து வர ‘புளு’ கார்னர் நோட்டீசு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »