Press "Enter" to skip to content

64 பேர் ஒரே இரவில் பலி.. 425ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. 20,400 பேர் பாதிப்பு.. சீனாவை உலுக்கிய கொரோனா!

பெய்ஜிங்: கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம் உலகம் முழுக்க பரவி வருகிறது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது.

கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க மொத்தம் 23 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.

எப்படி இருக்கும்

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக லேசான ஜலதோஷம் ஏற்படும். அதன்பின் குளிர் நடுக்கம் ஏற்படும். பின் இது நெஞ்சு வலியை உருவாக்கும். கடைசியில் இது மொத்தமாக உயிரையே குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின் வேறு ஒரு வகை சார்ஸ் நோயை சீனாவில் உண்டாக்கியது.

அதிக வேகம்

சீனாவில் பரவி வரும் இந்த கொரானா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகி வருகிறது என்று அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுகிறது. விலங்குகளிடம் இருந்து இன்னொரு மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று தெரிந்தால்தான் அதை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பலி எண்ணிக்கை

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மட்டும் இந்த வைரஸ் தாக்குதலால் 64 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று மட்டும் புதிதாக இந்த வைரஸ் தாக்குதலால் 6000 பேர் பாதிப்பு அடைந்தனர். இந்த வைரஸ் உருவான பின் ஒரே நாளில் இத்தனை பேர் மொத்தமாக பலியாவது இதுவே முதல்முறையாகும்.

மிக மோசமான நிலை

இந்த வைரஸ் இதனால் சார்ஸை விட கொடூரமான வைரஸாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வைரஸ் கேரளாவில் மூன்று பேருக்கு தாக்கியுள்ளது. மூன்று பேருமே சீனாவிற்கு படிக்க சென்றவர்கள். இதில் ஒருவர் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால கேரளாவில் மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »