Press "Enter" to skip to content

தமிழகத்தை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது… மோடி அரசுக்கு எதிராக எடப்பாடி அதிரடி..!

டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என முதல்வர் பழனிச்சாமி அதிரடியாக அறிவித்துள்ளார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி, அந்த பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்க தேவையில்லை என்று மத்திய அரசு சமீபத்தில் விதிகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால், இதுதொடர்பாக எதிர்ப்போ, வரவேற்போ எதுவும் தெரிவிக்காமல் அதிமுக அரசு மவுனமாக இருந்து வந்தது. 

இதையடுத்து, ஜனவரி 28-ம் தேதி மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழக வேளாண் பகுதிகளை மட்டுமல்ல; தமிழகத்தையே சீரழித்துப் பாலைவனமாக்கிவிடும் ஆபத்தான இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என அறிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர் என முதல்வர் பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »