Press "Enter" to skip to content

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்க்கு ஆஸ்கார் விருது..!! அவர் பெரும் முதல் விருது ..!! எப்படி கிடைத்தது.

 
 இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றிருக்கிறார். “ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்” எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக “பிராட் பிட்டுக்கு” ‘சிறந்த துணை நடிகர்’ எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ், வல்லுநர் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். “ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்” எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு ‘சிறந்த துணை நடிகர்’ எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘ஸ்டோரி 4’ வெல்ல, அதை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஜோனாஸ் பெற்றார்.சிறந்த குறும் ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘லேர்னிங் டு ஸ்கேட்போர்டு, இன் ய வார் சோன் எனும் திரைப்படம் தட்டிச்சென்றது. சென்ற ஆண்டு இதே பிரிவிற்கான விருதினை, மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த ‘பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்’ வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ஆம் ஆண்டு 81ஆவது அகாடமி அவார்ட்ஸ் விழாவில், தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ‘ஸ்லம்டாக்’ மில்லியனர் என்னும் திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனைப் படைத்தார்.

TBalamurukan

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »