Press "Enter" to skip to content

டெல்லியில் 5 முஸ்லிம்களும் அபார வெற்றி..!! தாமரையை தண்ணீர் குடிக்க வைத்த துடைப்பம்..!! பாஜகா வை கப்பலேற்றிய சி

 

BY; T.Balamurukan

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிறுத்தப்பட ஐந்து முஸ்லீம்  வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாஜக கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமைச் சட்டம் முஸ்லீம் மக்களை பாதிப்படையச் செய்யும் என்று, அவர்கள் ஒன்று கூடி டெல்லி தலைநகரில் கடும் குளிர்ரிலும் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லி தேர்தல் பாஜக அரசிற்கு பலத்த அடியை கொடுத்திருக்கிறது. டெல்லி முஸ்லீம் மக்களும் ,பாஜகவை எதிர்கொள்ள சரியான கட்சியாக இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையை ஆம்ஆத்மி இந்த தேர்தல் மூலம் பெற்றுள்ளது. 
 
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள இடங்களில் ஐந்து முஸ்லீம் சமூக வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர்.ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லாகான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பர்வேஸ்ஹஸ்மியை விட அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி கண்டார். இந்த தொகுதியில் ஹஸ்மி டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீலம்பூர் தொகுதி வேட்பாளர் அப்துல்ரகுமான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் ஜெயினை தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரும், ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவருமான மடின் அகமதுவால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பல்லிமரான் தொகுதி வேட்பாளர் இம்ரான் ஹுசைன், பாஜகவின் வேட்பாளர் லதா ஜோதியை தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளரும் ஐந்து முறை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான ஹாரூன் யூசுப் படுதோல்வி அடைந்தார். மட்டியா மஹால் தொகுதியில் வேட்பாளர் ஜோயிப் இக்பால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெர்றிருக்கிறார்.

இறுதியாக முஸ்தபாபாத் தொகுதி வேட்பாளர் ஹாஜி யூனுஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வேட்பாளர் ஜகதீஷ் பிரதானை வென்றார்.2015-ஆம் ஆண்டு பாஜக வென்ற மூன்று தொகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்று. பாஜக இந்த முறை டெல்லியை கைப்பற்ற தனிநபர் விமர்சனத்தையும் விட்டு வைக்காமல் வசைபாடி பார்த்தார் அமித்ஷா. கெஜ்ரிவால்,டெல்லி மக்களை ஏமாற்றுகிறார். அவர் ஒரு பயங்கரவாதி என்றெல்லாம் பிரச்சார யூக்தியாக பயன்படுத்தினார். இது எதுவுமே டெல்லியில் எடுபடவில்லை என்பதை டெல்லி தேர்தல் காட்டியிருக்கிறது. 
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »