Press "Enter" to skip to content

பாலியல் கொலை செய்தவர்களுக்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பளித்து திருநெல்வேலி நீதிமன்றம்..!!

By:T.Balamurukan

பாலியல் குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.ஒவ்வொரு நாளும் நீதிமன்றங்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நர்ஸ் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

கல்லிடைக்குறிச்சி, கேட்வாசல் தெருவைச் சேர்ந்த செல்லச்சாமி. இவர் மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். கடந்த 30-9-2008 அன்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் தமிழ்ச் செல்வி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் புலன்விசாரனை நடத்தி வந்த நிலையில், 29-9-2008 அன்று மாத்திரை வாங்குவது போல வந்த ஒரு கும்பல் தமிழ்ச்செல்வி வாயில் துணியைத் திணித்து கயிறால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. தமிழ்ச்செல்விக்குச் சொந்தமான 8 பவுன் தங்க செயினை அந்த கும்பல் திருடிச் சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ், அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திக், அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த கணேசன், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த சின்னத்துரை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »