Press "Enter" to skip to content

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் மாதம் 20-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

சென்னை:

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் மாதம் 20-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

10-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து ஆயிரத்து 664 மாணவர்களும், 7 லட்சத்து 88 ஆயிரத்து 195 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர்கள் 19 பேர் என மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 878 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதேபோல், 12-ம் வகுப்பு தேர்வை 6 லட்சத்து 84 ஆயிரத்து 68 மாணவர்களும், 5 லட்சத்து 22 ஆயிரத்து 819 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேர் என மொத்தம் 12 லட்சத்து 6 ஆயிரத்து 893 பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு அடுத்த மாதம் 30-ந் தேதி வரை நடக்கிறது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 30 லட்சத்து 96 ஆயிரத்து 771 பேர் எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வு 5376 மையங்களிலும், 12ம் வகுப்பு தேர்வு 4983 மையங்களிலும் நடைபெறுகிறது.

தேர்வர்கள் தேர்வு நடக்கும் வளாகத்துக்குள் காலை 9.45 மணிக்கு முன்பே வந்துவிட வேண்டும். தேர்வு அறையில் 10 மணிக்கு இருக்க வேண்டும். அதற்கு பின்பு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாணவர்கள் பள்ளி சீருடையிலும், பள்ளியின் அடையாள அட்டையும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வு தொடர்பான வதந்திகளை நம்பவும் கூடாது, அதை பரப்பவும் கூடாது. சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளோ, வதந்திகளோ தெரியவந்தால் உடனே சி.பி.எஸ்.இ.க்கு தெரிவிக்க வேண்டும்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »