Press "Enter" to skip to content

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நல்ல திட்டங்களும் இல்லை- கே.பாலகிருஷ்ணன்

தமிழக பட்ஜெட்டில் எவ்வித நல்ல திட்டங்களும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களும் இல்லை. மத்திய அரசின் நிதியை கேட்டு பெற முடியாத நிலையில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக அரசு வாங்கி உள்ள கடனையும் சேர்த்து ரூ. 4 லட்சம் கோடி கடன் தமிழக மக்கள் தலையில் விழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளமைக்கு தகுதியில்லாத நபர்களை உறுப்பினர்களாக நியமித்ததே காரணம். இந்த முறைகேடு விவகாரத்தில் கடைநிலை ஊழியர் மட்டுமே ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

நியாயமாக விசாரணை நடத்தினால் அவர்களை உடனடியாக இந்த அரசு இடமாற்றம் செய்து விடுகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிய அரசு 500 கடைகளை மூடியது. அதன் பின்னர் ஒரு கடை கூட மூடப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »