Press "Enter" to skip to content

மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல: சிவசேனா

மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதையே டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காட்டுகிறது என சிவசேனா தெரிவித்து உள்ளது.

மும்பை :

மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என சிவசேனா தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வெல்ல முடியாத கட்சியாக தோன்றியது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலில் அந்த கட்சி ஒரு அட்டை வீடு போல சரிந்துவிட்டது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா ராமரைத்தான் கிட்டத்தட்ட முன்னிறுத்தியது. ஆனால் அனுமனை வழிபடும் கெஜ்ரிவால் டெல்லியில் ராம ராஜ்யத்தை கொண்டு வந்து உள்ளார். இங்கு அனுமனுக்கு பின்னால் ராமர் நின்றார்.

தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் துரோகிகள் என பாரதீய ஜனதா தலைவர்கள் கூறினார்கள். எனவே ஒட்டுமொத்த டெல்லியும் அந்த முத்திரையை பெறப்போகிறதா?

மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதையே டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு காட்டுகிறது. எந்த நாடும் மதம் இல்லாமல் இல்லை. ஆனால் மதம் என்பது தேசபக்தி என்று அர்த்தம் அல்ல.

அரசியல் ஆதாயத்துக்காக மத பிரச்சினைகள் தூண்டப்பட்டன. ஆனால் அதை வாக்காளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. மோடியும், அமித்‌ஷாவும் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற கட்டுக்கதையை மக்கள் கடந்து செல்ல வேண்டும்.

பிரதமர் மோடிக்கும், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான பொதுவான அம்சம் இருவரும் சுயநலவாதிகள் என்பது தான். ஆனால் மோடிக்கு பெரும் ஆணவமும் உள்ளது.

கெஜ்ரிவால் ஒருமுறை முழு நாட்டையும் கைப்பற்ற விரும்புவதாக கூறினார். ஆனால் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் தனது வரம்பை உணர்ந்து கொண்டு டெல்லியில் தனது கட்சியை கட்டமைத்துக் கொண்டார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என பாரதீய ஜனதா உறுதி அளித்து இருந்தது. ஆனால் 15 ரூபாய் கூட செலுத்தப்படவில்லை.

இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »