Press "Enter" to skip to content

ராணுவத்தை அழைக்க கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லியில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால், ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி:

டெல்லியில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால், ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வன்முறை பாதித்த ஏராளமான மக்களுடன் இரவு முழுவதும் நான் தொடர்பில் இருந்தேன். டெல்லியில் நிலைமை மோசமாக உள்ளது. நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த போதும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே உடனடியாக ராணுவத்தை வரவழைப்பதுடன், வன்முறை பாதித்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக உள்துறை மந்திரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ள ஆம் ஆத்மி கட்சி, இது தொடர்பாக உள்துறை மந்திரிக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »