Press "Enter" to skip to content

வன்முறை தொடர்பாக 600க்கு மேற்பட்டோர் கைது – டெல்லி காவல் துறை

டெல்லி வன்முறை தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல், துப்பாக்கி சூடு, தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்களில் 39 பேர் பலியாகி உள்ளனர். 

பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தி, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 600க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாடணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »