Press "Enter" to skip to content

கத்தாரிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

தோகா:

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  சீனா மட்டுமின்றி ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 50-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துளனர்.

இந்நிலையில், கொரோனா பரவியுள்ள ஈரான் நாட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை கத்தார் நாட்டை சேர்ந்தவர்களை மீட்டு சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றனர். அவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

அந்த பரிசோதனையில் ஈரானில் இருந்து கத்தார் திரும்பிய 36 வயது நிரம்பிய நபருக்கு கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கத்தாரிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »