Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி

பாகிஸ்தானின் காகித தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமடைந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறால் பாய்லர் வெடித்து இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எனினும் சரியான காரணத்தை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »