Press "Enter" to skip to content

வெறுப்புணர்வு பேச்சு… பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

டெல்லியில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் நடந்த கடும் வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. வன்முறை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியதே இந்த மோதல் மற்றும் வன்முறைக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஸ் வர்மா ஆகியோர் பேசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மூன்று தலைவர்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிதாக கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடும்படி அவர் தனது மனுவில் கூறியுள்ளார். 

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றது. நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »