Press "Enter" to skip to content

டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு?

பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமராக பதவியேற்றது முதல் சமூக வலைதளங்களில் மோடி தொடர்ந்து கருத்துகளை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பிரதமர் மோடியை அவரது டுவிட்டர் பக்கத்தில் 5 கோடியை 33 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். 

இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “டுவிட்டர் , பேஸ்புக் ,இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் இருந்து வெளியேறுவது குறித்து நேற்று யோசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »