Press "Enter" to skip to content

கொரோனா பீதி: சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

கொரோனா பீதி காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் நோக்கில் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் நாளை மாலை  முதல் மார்ச் 31-ம்  தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

ஆனால் பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இதற்கிடையே, கொரோனா பீதி காரணமாக மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் கூட வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »