Press "Enter" to skip to content

கொரோனா: தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்ற துணை மாவட்ட ஆட்சியர் பணியிடைநீக்கம்

கொரோனா தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்ற சப்-கலெக்டர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஆகும். 

அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார். 

வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா 19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும் தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விதித்த உத்தரவை மீறி அனுபம் சர்மா தனது சொந்த ஊருக்கு சென்றது கேரள அதிகாரிகள் தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கொல்லம் கலெக்டர் தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய சர்மா குறித்து கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். 

அதில் சப்-கலெக்டர் அனுபம் சர்மா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்றது உறுதிபடுத்தப்பட்டது.

இதையடுத்து, தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »