Press "Enter" to skip to content

கொரோனாவை தடுக்க மக்கள் நிதி தரலாம்- பிரதமர் மோடி

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வேகமாக பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதிஉதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

account: pm cares, ac no: 2121pm20202, ifsc: sbinoooo691- இல் நிதியுதவி அளிக்கலாம். 

swift code: sbininbb104- இல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியுதவி வழங்கலாம். 

name of bank&branch: state bank of india, new delhi branch, upi id, pmcares@sbi

பொதுமக்கள் அளிக்கும் சிறிய அளவிலான நிதியுதவியும் ஏற்றுக்கொள்ளப்படும். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவிகள் உதவும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »