Press "Enter" to skip to content

கொரோனாவில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது – பிரதமர் மோடி

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்கவே ஊரடங்கு உத்தரவு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால் கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியாது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வீர வணக்கம். மக்களை தனிமைப்படுத்துவதே, கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »